
காத்திருக்கிறான்…
அவளுக்காக
8.20 க்கு வர வேண்டியவள்
இன்னும் வரவில்லை
8.30 ஆகியும் ....
நகர்ந்து கொண்டிருக்கிறது
தனது பாட்டில்
தன் வேலையை
ஒழுங்காக செய்து கொண்டிருக்கும்
கடிகாரம்! …
ஒவ்வொரு நொடியும்..
ஒவ்வொரு யுகமாக..
கழிகிறது.
எப்பொழுது முடியும்
இந்தக் காத்திருப்பு..
வருகையின்
தாமதத்திற்கான
காரணங்களை
தானே வகுத்தவாறே..
ஏக்கமும்
எரிச்சலும் கூடிய
இந்தக் காத்திருப்பு..
பூக்களின் அருகமைந்த
வாங்கிலே அமர்ந்து
கொண்டே….
காத்திருக்கிறான்…
நிமிர்ந்து பார்கையில்
தூரத்தில்
அதோ அவள்..
சற்று பாரமேறிய
உடலுடன் மெதுவாக
அசைந்து அசைந்து
வருகிறாள்.
அந்த
கூட்டமேந்திய
வசு வண்டி…
-----எழில்.
படிக்கும் போது காதலிக்காகக் காத்திருக்கின்றான் என்றல்லவா நினைத்தேன்! ம்ம்.......
ReplyDelete"எப்பொழுது முடியும் இந்தக்காத்திருப்பு " அருமை.
எதிர் பார்க்காதது நடக்கும் போது அது மனதில் நன்கு படிந்து விடும். கருத்துக்கு நன்றி..
ReplyDelete